மாநில அரசின் மலிவு விற்பனைத் திட்டத்திற்கு வெ.61.6 லட்சம் மானியம்- 20 லட்சம் பேர் பயன்

ஷா ஆலம், டிச 30- இவ்வாண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மாநில அரசின் மலிவு விற்பனை திட்டத்திற்கு மாநில அரசு 61 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியை மானியமாக வழங்கியுள்ளதோடு இத்திட்டத்தின் மூலம் சுமார் 20 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும் இந்த ஏசான் ராக்யாட் விற்பனைத் திட்டத்தின் மூலம் 1 கோடியே 96 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஏசான் ராக்யாட் திட்டம் மூலம் 1 கோடியே 96 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி வருமானம் கிடைத்துள்ளதோடு இத்திட்டத்திற்கு மாநில அரசு வழங்கிய 61 லட்சத்து 60 வெள்ளி மானியத்தின் மூலம் 20 லட்சம் மாநில மக்கள் பயன் பெற்றுள்ளனர் என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
செப்டம்பர் மாதம் தொடங்கி ஜனவரி 15ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் இந்த அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனைக்காக மாநில அரசு ஒரு கோடி வெள்ளி முதல் ஒன்றரை கோடி வெள்ளி வரை ஒதுக்கீடு செய்துள்ளதாக மந்திரி புசார்  அமிருடின் கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி கூறியிருந்தார்.
விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு, உள்நாட்டு வாணிக மற்றும் வாழக்கைச் செலவின அமைச்சின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவிருக்கும் இத்திட்டத்தில் ரொட்டி உள்ளிட்ட புதிய பொருள்களும் சேர்க்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

Pengarang :