SELANGOR

வீட்டின் முன் சாலையில் கட்டுமானப் பொருட்களை வைத்திருந்த வீட்டு உரிமையாளருக்குக் குற்ற நோட்டீஸ் – கோலா லங்காட் நகராட்சி கவுன்சில் (எம்பிகேஎல்)

ஷா ஆலம், டிச.31: பந்திங்கில் உள்ள தாமான் முலியாவில் தனது வீட்டின் முன் சாலையில் கட்டுமானப் பொருட்கள் வைத்திருந்ததாகக் கண்டறியப் பட்ட வீட்டு உரிமையாளருக்குக் கோலா லங்காட் நகராட்சி கவுன்சில் (எம்பிகேஎல்) குற்ற நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

கடந்த வியாழன் அன்று குடியிருப்பு பகுதியில் சட்ட அமலாக்க அதிகாரிகளின் ரோந்து மற்றும் ஆய்வு பணியை மேற்கொண்ட போது இக்குற்றம் கண்டறியப்பட்டதாக உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

“அனுமதியின்றி சாலையில் மணல் மற்றும் செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களை வைத்ததற்காக வீட்டின் உரிமையாளருக்குக்  கோலா லங்காட் நகராட்சி கவுன்சில் அமலாக்க அதிகாரிகள் குற்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

பிரிவு 47(2)(a), சட்டம் 133, சாலை சட்டம், வடிகால் மற்றும் கட்டிடங்கள் சட்டம் 1974 யின் கீழ் இந்த குற்றம் செய்யப் பட்டுள்ளதாகக் கோலா லங்காட் நகராட்சி கவுன்சில் விளக்கமளித்தது.

அமலாக்கப் பணியாளர்களால் அவ்வப்போது வழக்கமான ரோந்து கள் மேற்கொள்ளப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் 012-300 4217 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலமோ அல்லது வாட்சாப் (WhatsApp) மூலமாகவோ மேலும் தகவல்களை பெறலாம்.


Pengarang :