NATIONAL

சரவாக், சபா, கிளந்தான், திரங்கானுவில் தொடர் மழை அபாயம்

கோலாலம்பூர், ஜன. 4: சரவாக்கின் பல பகுதிகளில் ஜனவரி 4ஆம் தேதி வரை அதிக அளவில் தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் மெட் மலேசியா வெளியிட்ட அறிக்கையில், கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெதோங், சரிகேய், சிபு மற்றும் முகா ஆகிய இடங்களில் தொடர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபாவில் சண்டக்கான் (தெலுபிட், கினாபத்தாங்கான், பெலூரான் மற்றும் சண்டக்கான்) மற்றும் குடாத் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்ற வானிலை ஜனவரி 6 முதல் 7 வரை கிளந்தான் மற்றும் திரங்கானுவிலும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதே அறிக்கையில் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, கிளந்தானில் தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பாச்சோக், மாச்சாங், பாசீர் பூத்தே மற்றும் கோலாக்கெரை ஆகிய இடங்கள் அடங்கும். அதே சமயம் திரங்கானுவில் பெசூட், செத்யூ, கோல நெரஸ் மற்றும் கோலா திரங்கானு ஆகிய பகுதிகள் பாதிக்கப்படலாம்.

– பெர்னாமா


Pengarang :