SELANGOR

பள்ளி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கப் புக்கிட் மெலாவத்தி தொகுதி மக்களுக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், ஜன 4- மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்திற்கு வரும்
ஜனவரி 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி புக்கிட் மெலாவத்தி
தொகுதி மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் கட்டமைப்பு (எம்.பி.ஐ.) மற்றும் தொகுதி
சேவை மையத்தின் ஏற்பாட்டிலான இந்த திட்டத்திற்கு முதலில் பதிவு
செய்யும் 90 பேருக்கு உதவி வழங்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

இதற்கான விண்ணப்ப பாரங்களைத் தொகுதி சேவை மையத்தில் பெற்றுக்
கொள்ளலாம். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே உதவி
வழங்கப்படும் என அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

குடும்ப வருமானம் மாதம் 4,000 வெள்ளிக்கும் குறைவாக இருக்க
வேண்டும், பிள்ளைகள் ஆரம்ப அல்லது இடைநிலைப்பள்ளிகளில்
பயில்பவர்களாக இருக்க வேண்டும் மற்றும் தாய், தந்தை அல்லது
பராமரிப்பாளர் புக்கிட் மெலாவத்தி தொகுதி வாக்காளராக இருக்க
வேண்டும் என்பது இதற்கான நிபந்தனைகளாகும் என அவர் தெரிவித்தார்.

எனினும், சிலாங்கூர் ஸக்கத் வாரியம், யாயாசான் அனாக் சிலாங்கூர்,
பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தில்
பங்கேற்றவர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்க முடியாது என அவர்
தெளிவுபடுத்தினார்.

இந்த உதவித் திட்டம் தொடர்பில் மேல் விபரங்களைப் பெற விரும்புவோர்
013-334 5627 என்ற எண்களில் ஹாபிஷ் என்பவரைத் தொடர்பு
கொள்ளலாம்


Pengarang :