SELANGOR

சிலாங்கூர் பட்ஜெட் 2023 இல் பெண்களின் நலன் பேணப்படுகிறது

ஷா ஆலம், ஜன 4: சிலாங்கூர் எப்பொழுதும் பெண்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுகிறது. சிலாங்கூர் மாநில  பட்ஜெட் 2023 ல் பெண்கள் நலன் பேண படுவதற்குச்  சான்றாக விளங்கும் 5 திட்டங்களை மந்திரி புசார் குறிப்பிட்டிருந்தார்..

அவை, சிலாங்கூர் அரசாங்கம் பெண்கள் தலைமைத்துவ அகாடமி மற்றும் (ஏகேடபிள்யூ), வணிகங்களுக்கு சிறப்பு ஒதுக்கீடுகள், பெண் தொழில்முனைவோருக்கு உதவிகளை வழங்குதல், தனியார் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கும் உதவியும் ஆதரவும் அளிக்கப்பட்டது என்றார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி,

“கூடுதலாக, சிலாங்கூரில் உள்ள பெண்களின் எதிர்கால சேமிப்பிற்காக ஊழியர்கள் சேமிப்பு நிதியில் (EPF) ஐ-சூரி (I-Suri) ஒதுக்கீடுகளை நாங்கள் வழங்குகிறோம்.

“பெண்கள் மத்தியில், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குழுவில் (B40) மாதவிடாய் பிரச்சனையை தீர்க்கும் திட்டத்திற்கு நாங்கள் RM200,000க்கும் மேல் வழங்கியுள்ளோம்,” என்று அவர் இன்று முகநூல் பதிவு ஒன்றின் மூலம் கூறினார்.

கடந்த நவம்பரில் அங்கீகரிக்கப்பட்ட சிலாங்கூர் பட்ஜெட் 2023 இல் மேற்கண்ட ஐந்து முக்கிய விஷயங்களை அவர் வலியுறுத்தியிருந்தார்.

சிலாங்கூர் அரசாங்கம் நவம்பர் 25 அன்று RM1.25 பில்லியன் (125 கோடி ) 51 விழுக்காடு நிர்வாக செலவுகள் மற்றும் RM1.20 பில்லியன் ( 120 கோடி) 49 விழுக்காடு மேம்பாட்டுச் செலவுகளை உட்படுத்திய   RM2.45 பில்லியன் (245 கோடி)  2023 பட்ஜெட்டை தாக்கல் செய்தது.


Pengarang :