SETIU, 5 Jan — Pekerja, Che Mohd Zariat Che Abd Latif, 31, memeriksa ternakan kambing ketika tinjauan di Kampung Bari hari ini. Bencana banjir yang melanda Terengganu pada bulan lalu menjejaskan sektor pertanian, penternakan dan perikanan dengan kerugian yang direkodkan setakat ini berjumlah kira-kira RM48.7 juta. Pengerusi Jawatankuasa Pertanian, Industri Makanan, Perladangan, Komoditi dan Pembangunan Luar Bandar Terengganu Dr Azman Ibrahim berkata kerugian itu adalah yang tertinggi dalam tempoh lima tahun selepas kali terakhir pada Februari 2022, iaitu sekitar RM2 juta. –fotoBERNAMA (2023) HAK CIPTA TERPELIHARA

வெள்ளம் காரணமாக 440 கால்நடை வளர்ப்போருக்கு வெ.39 லட்சம் இழப்பு

கோத்தா பாரு, ஜன 9- நாடு முழுவதும் மொத்தம் 440 கால்நடை வளர்ப்பாளர்கள் கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் 39 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளதாக கால்நடை மருத்துவ சேவைத் துறையின்  துணைத் தலைமை இயக்குநர்  (மேம்பாடு) டாக்டர் சுரதன் கமாருடின் தெரிவித்தார். 

கால்நடைகளின் இறப்பு, கொட்டகைகள், தீவனப் புல் பயிர்கள், உபகரணங்கள் மற்றும் பண்ணை இயந்திரங்களுக்கு  ஏற்பட்ட சேதங்களால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முந்தைய ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்தது போல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இம்முறையும் அரசு உதவி செய்யும் என்று நம்புகிறேன். கால்நடைத் தொழிலில் பாதிக்கப்பட்ட வளர்ப்பாளர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக கால்நடை சேவைத் துறை எப்போதும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நடத்துகிறது என்று அவர்  குறிப்பிட்டார்.

நேற்று இங்கு,  வெள்ளத்திற்குப் பிந்தைய வளர்ப்பு பிராணிகளுக்கான உணவு உதவி விநியோகத் திட்டத்தில் பங்கேற்ற பின்  செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். 

கடந்த 2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட  287 விவசாயிகளுக்கு உதவ அரசாங்கம் 16  லட்சம் வெள்ளிக்கும் மேல்  செலவிட்டுள்ளது என்று டாக்டர் சுரதன் கூறினார்.

வெள்ள காலங்களில் கால்நடைகள், ஆடு, கோழி மற்றும் வாத்து போன்ற கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல உரிமையாளர்களுக்கு உயரமான பகுதிகளை அடையாளம் காண தனது துறை உதவியது என்றும் அவர் சொன்னார்.

இதனிடையே, பினாங்கில் கண்டறியப்பட்ட ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்  நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் சுரதன், நோய் பரவுவதை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு பண்ணை உரிமையாளர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளதாக சொன்னார்.

பினாங்கு, சிலாங்கூர், பேராக் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில்  இந்த நோய்த் தொற்று அபாயம் கண்டறியப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Pengarang :