SELANGOR

சிலாங்கூரில் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வெ.250.5 கோடி வருமானம் பதிவு

ஷா ஆலம், ஜன 11- சிலாங்கூர் மாநிலம் கடந்தாண்டு 150 கோடியே 50
லட்சம் வெள்ளியை வருமானமாக ஈட்டியது. இது மாநில அரசு
நிர்ணயித்த இலக்கை விட 50 கோடி வெள்ளி அதிகமாகும்.

வருமானத்தைப் பொறுத்த வரை கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான
மிகச் சிறந்த அடைவு நிலையாக இது விளங்குவதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நிர்ணயித்த இலக்கை விட அதிக தொகையை அதாவது 205.5 கோடி
வெள்ளியை மாநில அரசு வருமானமாக ஈட்டுவதற்கு ஆட்சியில்
உள்ளவர்களுக்கும் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும் இடையே காணப்பட்ட
அணுக்கமான ஒத்துழைப்பே காரணம் என்று அவர் சொன்னார்.

முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங்
கிம்மின் அறிக்கையை மேற்கோள் காட்டிப் பேசிய அமிருடின்,
கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 1.1 கோடி
முதல் 1.2 கோடி வெள்ளி வரையிலான வருமானமே பதிவு
செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

எனினும். செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான நான்கு மாதக் காலத்தில்
250 கோடி வெள்ளியை எட்டிவிட்டோம் என்று இன்று இங்கு 2023ஆம்
ஆண்டிற்கான முக்கிய உரையை நிகழ்த்திய போது அவர் கூறினார்.

இந்த சாதனையைப் புரிவதற்குத் துணை புரிந்த அரசாங்கத்தை வழி
நடத்துவோர், நிர்வாகத் தரப்பினர் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு தாம்
நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தின் பொருளாதாரத்தை உந்தச் செய்வதில் அவர்கள் பெரும்
பங்காற்றினர். இதன் மூலம் பொது மக்கள் மற்றும் முதலீட்டாளர்களின்
நம்பிக்கையைப் பெற முடிந்த து என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் பத்தாங் காலி நிலச்சரிவு
சம்பவங்களுக்கு மத்தியிலும் மாநில அரசு தொடர்ந்து வலுவுடன் இருப்பதற்கு இறைவனுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :