NATIONAL

சாலை நெரிசலைக் குறைக்க 12 ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பப் பாதைகள் அதிகரிப்பு – பிளஸ் எக்ஸ்பிரஸ்வே பெர்ஹாட்

கோலாலம்பூர், ஜன 13: நெடுஞ்சாலைப் பயனர்களின் புகார்களைத் தொடர்ந்து, நெரிசலைக் குறைக்கப் பிளஸ் எக்ஸ்பிரஸ்வே பெர்ஹாட் 12 ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பப் பாதைகளை ஏப்ரல் பாதியில் ஏற்பாடு செய்யவுள்ளது.

டச் என் கோ மலேசியக் குழுமம், மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் பிளஸ் மலேசியா ஆகியவற்றின் பிரதிநிதிகளை இன்று காலை சந்தித்தப் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

இந்த பிரச்சனையைக் குறித்து பல புகார்கள் பெறப்பட்டன, காரணம் இதனால் சுங்கச்சாவடியில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

“இந்தக் கூட்டத்தில், அனைத்து தரப்பினரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அதே வேளையில், பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்,” என்று அவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

– பெர்னாமா


Pengarang :