NATIONAL

மலேசியா முழுவதும் ‘சாக்கிட்’ (sakit) எனும் கட்டுமானம் நிறைவு பெறாத 17 பள்ளிகள் மீட்டெடுக்கப்படும்

நிபோங் தெபால், ஜனவரி 13: மலேசியா முழுவதும் ‘சாகிட்’ (sakit) என வகைப்படுத்தப் பட்டுள்ள 17 பள்ளிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் மீட்டெடுக்க முடியும் எனக் கல்வி அமைச்சகம் (கேபிஎம்) நம்புகிறது.

அதன் அமைச்சர் பாட்லினா சிடெக் (Fadhlina Sidek), ‘சாகிட்’  நிலையிலிருக்கும் அனைத்து பள்ளிகளையும் சரி செய்ய சீர்மைப்பு பணிகள் விரைவாக செய்யப்படுவதைத் தனது தரப்பு உறுதி செய்யும் என்றார்.

“இந்த 17 பள்ளிகளிலும் மேம்பாடு நடவடிக்கைகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற சில பிரச்னைகளால் இறுதிப் பணிகள் மட்டும் தாமதமாகி வருகின்றன.

“இந்த 17 பள்ளிகளும் காலவரையறைக்கு ஏற்ப துரிதப் படுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம், இதனால் அவை “சாக்கிட்“ திட்ட நிலையிலிருந்து மறு டெண்டர் நிலைக்கு மாற்றப்படும்,” என்று எஸ்.கே.கெலேடாங் ஜெயா பள்ளியைப் பார்வையிட்ட போது கூறினார்.

மேலும், பள்ளி வசதிகளை பராமரிப்பதற்காக எஸ்.கே.கெலேடாங் ஜெயா பள்ளிக்குத் தனது அமைச்சகம் 250,000 ரிங்கிட் ஒதுக்கும் என்றார்.

முன்னதாக, அவர் இங்கு அருகில் உள்ள தஞ்சோங் பெரெம்பாங்கில் உள்ள சுங்கை அச்சே தேசிய உயர்நிலைப் பள்ளியைப் பார்வையிட்டார். சிற்றுண்டிசாலை மற்றும் பள்ளி வசதிகளைப் பராமரிப்பதற்காக இப்பள்ளி கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்திடம் இருந்து RM300,000 ஒதுக்கீட்டைப் பெற்றது.

– பெர்னாமா


Pengarang :