NATIONAL

டிஜிட்டல் பொருளாதார மையம் (PEDi) கிராமப்புற உற்பத்திகளை சந்தைபடுத்த  ஊக்குவிக்கிறது

மாராங், ஜன 14: டிஜிட்டல் பொருளாதார மையம் (PEDi) கிராம மக்களால், குறிப்பாக கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்த உருவாக்கப்பட்ட மிகவும் பயனுள்ள தளங்களில் ஒன்றாகும்.

PEDi மூலம் ஆர்வமுள்ள எவரும் தங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் விளம்பரப் படுத்தலாம் என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துணை அமைச்சர் தியோ நி சிங் (Teo Nie Ching) தெரிவித்தார்.

“PEDi கிராம மக்களுக்கு அடிப்படை கணினித் திறன்களைப் பற்றி கற்பிக்க உதவும்.

“ஆன்லைனில் வணிகம் செய்ய ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்த மையம் உதவுகிறது. அவர்களின் தயாரிப்புகளை எவ்வாறு விளம்பரப் படுத்துவது என்பதை கற்பிக்க பயிற்சி வகுப்புகள் உள்ளன,” என்று அவர் இன்று இங்கு கம்போங் செந்துல் பதாவில் உள்ள PEDi ஐப் பார்வையிட்ட பிறகு கூறினார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சகத்தின் (KKD) நோக்கத்திற்கு ஏற்ப இந்த திட்டம் இருப்பதாக அவர் கூறினார், இதனால் அதிகமான தொழில் முனைவோர் ஆன்லைன் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை நாடு முழுவதும் 911 PEDi செயல்பட்டு வருவதாகவும், உள்ளூர் சமூகத்தில் PEDi இன் செயல்பாடு மற்றும் பங்கை நன்கு புரிந்து கொள்வதற்காக இந்த மையத்திற்கு வருகை புரிந்து இருப்பதாகவும் தியோ கூறினார்.

“PEDi கிராம மக்களுக்கு உதவ முடியும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் “PEDi“ செயலில் உள்ள செயல்பாடுகளை அதிகரிக்க ஆய்வு செய்யும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், திரங்கானுவில் நான்கு PEDi வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் அந்த மையங்களைச் சுத்தம் செய்து பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் அவை மீண்டும் செயல்படத் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

– பெர்னாம


Pengarang :