NATIONAL

இந்த ஆண்டு 500,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மலேசியாவிற்குக் கொண்டு வரப்படுவர்

பத்து காஜா, ஜன. 16 – இந்த ஆண்டு 500,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மலேசியாவிற்கு வருவதால் மலேசியர்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படாது என்று மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தோட்டம், விவசாயம் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட உள்ளூர் தொழிலாளர்களுக்கு நாட்டம் இல்லாத துறைகளில் ஈடுபடுத்துவதற்கு ஆசியாவின் 15 நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்றார்.

“உள்ளூர் தொழிலாளர்கள் இந்தத் துறைகளில் வேலைக்கு சேர்ப்பது கடினம். இந்தத் துறைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாம் சார்ந்திருப்பது மிக அதிகமாக உள்ளது, போதுமான தொழிலாளர்களை இல்லாவிட்டால் அந்த துறைகளின் செயல்பாடு சீர்குலைத்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்,” என்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோய்களின் போது 700,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளனர். இது பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால் தொழிலாளர் பற்றாக்குறை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களை பணி அமர்த்தும் செயல்முறையை எளிமைப்படுத்தவும், விரைவுபடுத்துவது மனிதவள அமைச்சகமும் உள்துறை அமைச்சகமும் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளன.

போதுமான பணியாளர்கள் இல்லாவிட்டால் பல வணிகங்கள் மூடப்படும். எனவே நிலைமை மோசமடைவதற்கு முன்பு, தேவைப்படும் துறைகளின் செயல்பாடுகளுக்கு நாங்கள் மனிதவளத்தை வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார்.

தேசிய மீட்பு கவுன்சில் உறுப்பினர் டத்தோ மைக்கேல் காங், கடந்த ஆண்டு அக்டோபரில், கோவிட் -19 தொற்று நோயைத் தொடர்ந்து நாட்டின் மீட்பு செயல்முறைக்கு ஆதரவளிக்க,  சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க மொத்தம் 500,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவை என்று குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :