SELANGOR

சுங்கை திங்கி அணையை மேம்படுத்த மாநில அரசு RM800,000 ஒதுக்கீடு செய்துள்ளது

சபா பெர்ணம், ஜன. 16: இங்குள்ள ஜாலான் கீலாங் பாடி, சுங்கை திங்கி அணையை மேம்படுத்த மாநில அரசு RM800,000 ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த திட்டத்தில் சிறப்பு கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன, அவை ‘ஸ்டைரோஃபோம்’ ஆகும், இக்கருவி அணை மீண்டும் உடையாமல் இருப்பதை உறுதி செய்யும் என உள்கட்டமைப்பு எஸ்கோ இர் இஷாம் அசிம்.

“ஒவ்வொரு முறையும் வெள்ளம் ஏற்படும் போது இந்த அணை அடிக்கடி உடைந்து விடும், எனவே அதை வலுவாக்க  முடிவு   எடுத்துள்ளோம். மேலும் இந்த மாத இறுதிக்குள் முழுமையாக மேம்பாட்டு பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்,” என அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

நேற்று, சுங்கை காஜாங் லாமா கடற்கரையில் ஏற்படும் அதிக அலைகளை தடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சீரமைப்பு பணிகளையும் இஷாம் ஆய்வு செய்தார்.

அவரைப் பொறுத்தவரை, இது சம்பந்தப்பட்ட பகுதியில் வெள்ளப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான குறுகியக் கால நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

“மாநில அரசு நீண்ட காலத் திட்டத்தை வகுத்துள்ளது, அது அங்கு வெள்ளத்தைத் தவிர்க்க உடனடியாக செயல்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :