NATIONAL

பெரிய தொகையை மீட்கும் போது தலைமையாசிரியர்கள் எஸ்.ஒ.பி. விதியைப் பின்பற்ற வேண்டும்

ஷா ஆலம், ஜன 17- பெரிய தொகையை வங்கியிலிருந்து மீட்கும் போது
கல்வியமைச்சு நிர்ணயித்துள்ள நிலையான செயலாக்க நடைமுறையை
(எஸ்.ஒ.பி.) தலைமையாசிரியர்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் என
வலியுறுத்தப்பட்டுள்ளது.

பத்தாயிரம் வெள்ளி வரையிலான தொகையை மீட்கும் போது
தலைமையாசிரியர் இரு ஆசிரியர்களை துணைக்கு அழைக்க வேண்டும்
என்பதோடு அதற்கு மேற்பட்ட தொகையாக இருந்தால் போலீசாரின்
உதவியை நாட வேண்டும் என அமைச்சின் சுற்றறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

சிலாங்கூர் பெரனாங்கில் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் நேற்று 109,000
வெள்ளியை கொள்ளையர்களிடம் பறிகொடுத்தது தொடர்பில் ஊடகங்கள்
நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.

மாணவர்களுக்கு அரசின் தொடக்க உதவித் தொகையைப்
பகிர்ந்தளிப்பதற்காக அந்த பணத்தைச் செமினியில் உள்ள வங்கி
ஒன்றிலிருந்து மீட்டு காரின் இருக்கையில் வைத்து விட்டு குளிர்பானம்
வாங்குவதற்காக அருகிலுள்ள உணவகம் சென்ற போது அடையாளம்
தெரியாத நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து பணத்தைத் திருடிச்
சென்றனர்.


Pengarang :