NATIONAL

சீனப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கூட்டரசு சாலைகளில் வேக வரம்பு மணிக்கு 10 கிலோ மீட்டர் (கிமீ/மணி) குறைக்கப்பட்டுள்ளது

டெங்கில், ஜன. 17: சீனப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கூட்டரசு சாலைகளில் வேக வரம்பு நாளை தொடங்கி ஜனவரி 27 வரை மணிக்கு 10 கிலோ மீட்டர் (கிமீ/மணி) குறைக்கப்பட்டுள்ளது,.

பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறுகையில், கூட்டரசு சாலைகளில் வேக வரம்பு மணிக்கு 90 கி மீ க்கு பதிலாக 80 கி மீ ஆக குறைக்கப்பட்டுள்ளது.

“பாதுகாப்பை அதிகரிக்கவும், பண்டிகைக் காலங்களில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளின் அபாயத்தைக் குறைக்கவும் அரசு மேற்கொண்டுள்ள பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்” என்றார்.

‘பண்டு செர்மாட், சம்பை செலமட்’ என்ற கருப்பொருளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நடவடிக்கையானது, பொதுப்பணி அமைச்சகம் (KKR) மற்றும் போக்குவரத்து அமைச்சகம் (MoT) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்துவது முதல் முறையாகும்..

கூட்டாட்சி சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழும் 76 இடங்களைத் தனது தரப்பு கண்டறிந்து உள்ளதாகவும், அந்த இடங்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் நந்தா கூறினார்.

கூட்டாட்சி சாலைகளில் பயனாளிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அடிக்கடி விபத்துகள் நிகழும் 53 இடங்களில் (பிளாக் ஸ்பாட்கள்) RM17.2 மில்லியன் செலவில் பழுது பார்க்கும் பணியை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும், 40 இடங்களில் தெரு விளக்குகள் பொருத்தப்பட்ட தாகவும் அவர் கூறினார். சாலை பாதுகாப்பு உள்கட்டமைப்பு மேம்படுத்தல் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு RM4.7 மில்லியன் செலவானது குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா


Pengarang :