சிலாங்கூர் மாநில அரசின் பொங்கல் விழா ஷா ஆலம், ரவாங், செமினியில் நடைபெறும்.

ஷா ஆலம், ஜன 20- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான 2023ஆம் ஆண்டிற்கான பொங்கல் விழா ஷா ஆலம், ரவாங் மற்றும் செமினி ஆகிய மூன்று இடங்களில் வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்படவுள்ளது.

இந்த பொங்கல் விழாவின் பிரதான நிகழ்வு ஷா ஆலம், தாமான் ஸ்ரீ மூடா ஸ்ரீ சுவர்ண மகா மாரியம்மன் ஆலயத்தில் வரும் பிப்வரி மாதம் 11ஆம் தேதி நடைபெறும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் கூறினார்.

இந்த நிகழ்வு காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மற்றும் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை என இரு பிரிவுகளாக நடத்தப்படும். இந்த விழாவுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு வருகை புரிவார் என்று அவர் குறிப்பிட்டார்.

பாரம்பரிய நிகழ்வுகளை உள்ளடக்கிய இந்த விழாவில் சிறப்பு அங்கமாக மந்திரி  புசார் ஆலய பொறுப்பாளர்களிடம் மாநில அரசின் மானியத்திற்கான காசோலைகளை ஒப்படைப்பார் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த பொங்கல் விழாவின் இரண்டாம் நிகழ்வு ரவாங், தாமான் முஹிபா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இம்மாதம் நாளை 21ஆம் தேதி இரவு 7.00 மணி தொடங்கி நடைபெறும்.

மூன்றாவது நிகழ்வு இம்மாதம் 28ஆம் தேதி செமினி, பண்டார் ரிஞ்சிங் செக்சன் 1, திடலில் இரவு 7.00 மணி முதல் நடைபெறவுள்ளது என கணபதிராவ் மேலும் தெரிவித்தார்.


Pengarang :