SELANGOR

கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் சோதனையில் ஐந்து வணிக வளாகங்களுக்கு 18 குற்றப்பதிவுகள்

ஷா ஆலம், ஜன 23- தாமான் செந்தோசா, லிந்தாங் டத்தோ ஷாபுடின்
1இல் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடி கடைகள் மீது கிள்ளான்
நகராண்மைக் கழகம் இம்மாதம் 20ஆம் தேதி மேற்கொண்ட சிறப்புச்
சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 18 குற்றப்பதிவுகள்
வழஙகப்பட்டன.

உணவுக் கழிவு மற்றும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை
வடிகால்களில் வீசியது, மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டியை
வைத்திராதது, பொது இடங்களில் குப்பைகளை வீசியது உள்ளிட்ட
குற்றங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நகராண்மைக்
கழகத்தின் வர்த்தகத் தொடர்பு பிரிவின் இயக்குநர் நோர்பிஷா மாபிஷ்
கூறினார்.

நகராண்மைக் கழகத்தின் அமலாக்க நடவடிக்கை பிரிவு ஆறு
குற்றப்பதிவுகளை வெளியிட்ட வேளையில் சுற்றுச் சூழல் சேவைத் துறை
எஞ்சிய 12 குற்றப்பதிவுகளை வெளியிட்டது என்று அவர் தெரிவித்தார்.

நகராண்மைக் கழகத்தின் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று நகராண்மை கழகத்தின் பேஸ்புக்
மூலம் வெளியிட்ட அறிக்கையில் அவர் சொன்னார்.

இந்த சோதனை நடவடிக்கையில் நகராண்மைக் கழகத்தின் 15 பேரடங்கிய
குழுவினர் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :