SELANGOR

நாளை மறுசுழற்சி பொருட்களைப் பணமாக்க ஒரு நல்ல வாய்ப்பு – சபாக் பெர்ணம்

ஷா ஆலம், ஜன 25: சபாக் பெர்ணமில் வசிப்பவர்கள் மற்றும் அவ்விடத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் நாளை மறுசுழற்சி திட்டத்தின் மூலம் மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களை பணமாக மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பு உள்ளது.

சபாக் பெர்னாம் மாவட்டக் கவுன்சில் (MDSB) சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் துறையின் சுற்றுச்சூழல் பிரிவின் இத்திட்டம் அதன் அலுவலகத்தின் பின்புற வாயிலில் காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

“மறுசுழற்சி செய்வதிலிருந்து பலன்களைப் பெறுங்கள்“.

“மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக், இரும்பு, அலுமினியம், பால் கேன்கள் மற்றும் பெட்டிகள் போன்று பணமாக மாற்ற கூடிய பொருட்கள் உடன் கொண்டு வாருங்கள்.

“நாளிதழ்கள், புத்தகங்கள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் வீசக்கூடிய மின்சாதனப் பொருட்கள் (இ-வேஸ்ட்) ஆகிய பொருள்களையும் கொண்டு வரலாம்,“ என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.


Pengarang :