SELANGOR

உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு – கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில்

ஷா ஆலம் ஜன 26: கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில் (எம்பிகேஎல்) இன்று தெலோக் டத்தோக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது.

சம்பந்தப்பட்ட நபருக்கு 490 சம்மன் தொகை இருப்பதாகவும், 2002 முதல் வாகனங்கள் நிறுத்தும் தொடர்பான அந்த சம்மன்கள் செலுத்தத் தவறிய தாகவும் உள்ளாட்சி அமைப்பு (PBT) கூறியது.

“மாஜிஸ்திரேட் கைருல் ஃபர்ஹி யூசோப் அந்நபருக்கு RM300 அபராதம் அல்லது 5 நாட்கள் சிறை தண்டனை விதித்தார். சாலைப் போக்குவரத்து ஆணையின் (பார்க்கிங் இட ஒதுக்கீடு) MDKL 2007 இன் பிரிவு 36(1)b இன் கீழ், வாகனத்தை நிறுத்துவதற்கு பணம் செலுத்தத் தவறியதால் இந்த தண்டனை வழங்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதத்தைச் செலுத்தினார்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையை எம்.பி.கே.எல் வழக்கு விசாரணை அதிகாரி ஹஸ்ரிசல் அப்துல் ரஹீம் கையாண்டார். அவருக்கு உதவியாக நோராசிசி நடிமின் இருந்தார்.


Pengarang :