SELANGOR

மலிவு விற்பனையில் கலந்து கொள்ளும் முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு RM5 கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளன – பெர்மாதாங் மாநிலச் சட்டமன்றம்

ஷா ஆலம், ஜன 28: பெர்மாதாங் மாநிலச் சட்டமன்ற (DUN) சமூக சேவை மையம் (PKM) கடந்த வியாழன் அன்று தஞ்சோங் கராங்கில் உள்ள கம்போங் உஜோங் பெர்மாதாங் பொது மண்டபத்தில் மலிவு விற்பனையில் கலந்து கொள்ளும் முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு RM5 மதிப்புமிக்க கூப்பன்களை விநியோகித்து உள்ளது.

மலிவு விற்பனை திட்டத்தில் கலந்து கொள்ளும் மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த கூப்பன்கள் வழங்கப்பட்டது என்று அதன் பிரதிநிதி கூறினார்.

கடந்த ஆண்டு தொடங்கிய சிலாங்கூரின் மலிவு விற்பனைத் திட்டத்தின் போது, பெர்மாதாங் மாநிலச் சட்டமன்றம் இந்த RM5 கூப்பன்களை வழங்குவது ஏழாவது முறையாகும்.

“கூப்பன் மூலம் மக்கள் அதிக பொருட்களை வாங்கலாம் மற்றும் மேலும் அவர்களால் சேமிக்கவும் முடியும்” என்று ரோசானா ஜைனல் அபிடின் கூறினார்.

அவரது கூற்றுப்படி, கிட்டத்தட்ட 400 வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் கொள்ள வந்துள்ளனர். காலை 11.30 மணியளவில் முட்டை மற்றும் கோழிகள் விற்று தீர்ந்ததாகக் கூறினார்.

“அடுத்து இந்நிகழ்வு  ஜனவரி 31 அன்று நடைபெறும்,” என்று அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு பெர்மாதாங் மாநில சட்டமன்றத்தில் 20,000 குடியிருப்பாளர்கள் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) செயல்படுத்தப்படும் இம் மலிவு விற்பனை திட்டம் ஜனவரி 16 முதல் இந்த மார்ச் வரை தொடர்ந்து நடைபெறும்.


Pengarang :