SELANGOR

இந்தியச் சிலாங்கூர் தொழில் முனைவோர் மேம்பாடு ஐ-சிட் (I-Seed) திட்டத்திற்கு RM1 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜன 28: இந்தியச் சிலாங்கூர் தொழில் முனைவோர் மேம்பாடு ஐ-சிட் (I-Seed) திட்டம் இந்த ஆண்டு RM1 மில்லியன் ஒதுக்கீட்டில் தொடர்கிறது.

வணிக உபகரண வழங்கும் உதவி திட்டம்,  பல தொழில் முனைவோர் தங்கள் வருமானத்தை அதிகரிக்க உதவியுள்ளது எனச் சமூகப் பொருளாதார மேம்பாடு எஸ்கோ தெரிவித்தார்.

“ஐ-சிட் ஒதுக்கீடு ரிங்கிட் 1 மில்லியனாக உள்ள நிலையில் இதுவரை, முதற்கட்ட விண்ணப்பங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளது. உதவி வழங்குவது குறித்து தேர்வுக் குழு கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

“எவ்வாறாயினும், முதல் கட்டத்திற்கான உதவியை அடுத்த மே மாதத்திற்கு முன்னர் வழங்கப்படுவதை உறுதி செய்வதே எங்கள் திட்டமிடல்” என்று கணபதிராவைத் தொடர்பு கொண்ட போது கூறினார்.

இந்தியர்கள் நடத்தும் தொழிலுக்கு ஏற்ப உபகரண உதவி வழங்குவது அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் எனும் நோக்கத்திற்காக ஐ-சீட் திட்டம் தொடங்கப்பட்டது.

அந்த உதவி கிடைப்பதற்கான தகுதிகள் சிலாங்கூர் குடிமக்கள் அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்களாக இருக்க வேண்டும், தனிநபர் மற்றும் குடும்ப வருமானம் மாதத்திற்கு RM3,000 க்கும் குறைவாக உள்ளவர்கள் மற்றும் வணிகம் சிலாங்கூர் மாநிலத்தில் செயல்பட வேண்டும்.

கூடுதலாக, வணிகம் சீரானதாகவும் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் அல்லது அவரின் துணையார் (கணவன்/மனைவி) சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்பு புளூபிரிண்ட் உதவித் திட்டம் அல்லது சிலாங்கூர் சிறுதொழில் முனைவோர் நிதித் திட்டத்தின் கீழ் உபகரண உதவியைப் பெற்றிருக்கக் கூடாது.


Pengarang :