NATIONAL

அனைத்து மாநிலங்களிலும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனைக்குக் கல்வி அமைச்சகம் தீர்வு காணும்

நிபோங் திபால், ஜன 30: புதிய பள்ளித் தவணை வரும் மார்ச் மாதம் தொடங்கும் முன், அனைத்து மாநிலங்களிலும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனைக்குக் கல்வி அமைச்சகம் (கேபிஎம்) தீர்வு காணும் என்று அதன் அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.

சரவாக்கில் உள்ள 3,000 ஆசிரியர் பற்றாக்குறையில் 50 சதவீதத்தை மார்ச் மாதத்திற்குள் நிரப்புவோம் என்று அவரது தரப்பு மாநிலத்தில் உள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக முன்னர் அறிவித்திருந்தது.

“மற்ற மாநிலங்களிலும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை உள்ளது, ஆனால் சரவாக் மாநிலத்துடன் ஒப்பிடும்போது இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அளவில் இல்லை. அதனால்தான் அமைச்சகம் சரவாக் மாநிலத்தில் அப் பிரச்சனையை முதலில் கையாளுகிறது,“.

“இந்த விஷயத்தையும் நாங்கள் ஆராய்ந்து பார்ப்போம், குறிப்பாக அடுத்த மார்ச் மாதம் பள்ளி திறக்கும் முன் ஆசிரியர்களை தயார் படுத்துவோம்,“ என்றார் ஃபத்லினா. ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை உள்ள அனைத்து மாநிலத்திலும் அதற்கு தீர்வு காண்போம், ”என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சமூக ஊடகங்கள் மூலம் ஒரு பிரச்சினையைப் பற்றிக் குரல் கொடுப்பதில் ஆசிரியர்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப் படக்கூடாது என்று ஃபத்லினா அவரின் கருத்தை முன் வைத்தார். கருத்துகள் ஆக்கப்பூர்வமாக இருக்கும் வரை, அமைச்சகம் அதை ஏற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கருதுகிறார்.

– பெர்னாமா


Pengarang :