NATIONAL

வாட்ஸ்அப் செயலி மூலம் வேலை வாய்ப்பு – பெண் ஒருவர் RM89,560 ஏமாற்றப்பட்டார்

குவாந்தான், பிப் 8: கடந்த வாரம் வாட்ஸ்அப் செயலி வழி இணையத் தளத்தில் வேலை கிடைக்கும் என்று நம்பி ஏமாறிய பெண் ஒருவர் RM89,560 நஷ்டம் அடைந்துள்ளார்.

பகாங் காவல் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுஃப், பாதிக்கப்பட்ட 34 வயதான நபர் பிப்ரவரி 4 ஆம் தேதி இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டதாக கூறினார், அதற்கு அவர் இன்ஸ்டாகிராம் கணக்கில் ‘லைக்’ மார்க் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் பின் தொடரும் ஒவ்வொரு கணக்கிற்கும் RM5 கமிஷன் வழங்கப்படுவதாகவும், சந்தேக நபரிடமிருந்து RM590 பெற்றதாகவும், பின் அது அவரது தனிப்பட்ட கணக்கில் டெபாசிட் செய்யப் பட்டதாகவும் கூறினார்.

“அந்தத் தொகை பாதிக்கப்பட்டவருக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் தனது சேமிப்பையும் மற்றும் அதிக பணிகளைப் பெற குடும்ப உறுப்பினர்களிடம் கடனும் வாங்கினார்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ராம்லி கூறுகையில், பாதிக்கப்பட்டவர் சந்தேக நபர் கொடுத்த ஏழு கணக்குகளுக்குப் 10 பரிவர்த்தனைகளை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் நேற்று குவாந்தான் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் (ஐபிடி) புகார் அளித்தார்.

சமூக வலைதளங்கள் மூலம் வழங்கப்படும் வேலை வாய்ப்புகளை நம்பி பொதுமக்கள் எளிதில் ஏமாற வேண்டாம் என்றும், மோசடிக்கு ஆளாகாமல் இருக்க வேலை வழங்கும் நிறுவனம் அல்லது தரப்பினரின் பின்னணியைச் சரிபார்க்கவும் என்றும் ராம்லி அறிவுறுத்தினார்.

– பெர்னாமா


Pengarang :