SELANGOR

மலிவு விற்பனைக்குப் பொதுமக்கள் தங்கள் சொந்தப் பைகளை எடுத்துவாருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் – சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம்

அம்பாங் ஜெயா, பிப் 9: சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) ஏற்பாடு செய்துள்ள மலிவு விற்பனைக்கு வரும் போது பொதுமக்கள் தங்கள் சொந்த பைகளை எடுத்துச் செல்வது பற்றிய விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது.

ஜெலஜா எஹ்சான் ரக்யாட் திட்டத்தின் அதிகாரி, பிளாஸ்டிக் இல்லாதப் பிரச்சாரத்தை வெற்றிபெறச் செய்யும் வகையில், குடியிருப்பாளர்கள் தங்களுடைய சொந்தப் பைகளைக் கொண்டு வருமாறு அறிவுறுத்த மக்கள் பிரதிநிதிகள் உதவுவார்கள் என்று நம்புகிறார்.

“எனவே, மாநிலச் சட்டமன்றத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் இதைப் பற்றி பொதுமக்களிடையே பரப்புவதற்கு உதவுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று சம்சியா சம்சுடின் ஜாலான் பூங்கா மெலோர், லெம்பா மாஜூவில் (டுன் தெரதாய்) நடைபெற்ற மலிவு விற்பனை போது இவ்வாறு கூறினார்.

காலை 10 மணிக்கு தொடங்கிய விற்பனையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொண்டனர். “இன்று நாங்கள் முட்டையைத் தவிர பிற பொருட்களை மீண்டும் மீண்டும் வாங்க அனுமதித்தோம் ,” என்று அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி 5 அன்று, சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்), இம் மலிவு விற்பனை திட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பிளாஸ்டிக் பைகளின் பயன் பாட்டைத் தடுக்கும் பிரச்சாரத்தை ஆதரிக்கும் வகையில் தங்களின் சொந்த பைகளைக் கொண்டு வருமாறு முகநூல் மூலம் கேட்டுக் கொண்டது.


Pengarang :