SELANGOR

ஸ்மார்ட் சிட்டி செயல் திட்டம் 2030 அமர்வு – கிள்ளான் நகராண்மை கழகம்

ஷா ஆலம், பிப் 9: கிள்ளான் நகராண்மை கழகம் (MPK),  ஸ்மார்ட் சிட்டி செயல் திட்டம் 2030 அமர்வில் பங்கேற்க நிறுவனங்கள், தொழில்நுட்பத் துறை இயக்குனர்கள் மற்றும் வணிக நிறுவனங்களையும் அழைக்கிறது.

நகர மற்றும் கிராமத் திட்டமிடல் துறை (PLAN Malaysia) உடன் இணைந்து இந்த திட்டத்தை மேற்கொள்ளவது தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக உள்ளாட்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

“ஸ்மார்ட் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்வதற்காக இந்த அமர்வு நடத்தப்படுகிறது.

“இவ்வாறு, இந்த அமர்வில் பங்கேற்க அனைத்து நிறுவனங்களின், தொழில்நுட்ப துறை இயக்குனர்கள் அல்லது கல்வியாளர்கள் உட்பட எந்த ஒரு வணிக நிறுவனமும் பங்கேற்பதை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

2030 ஆம் ஆண்டுக்குள் கிள்ளான் ஸ்மார்ட் சிட்டி தரத்தை அடைவதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் அரசு நிறுவனங்களுக்கு இந்த செயல் திட்டம் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

இந்த அமர்வில் பங்கேற்க ஆர்வமுள்ள எந்தவொரு நிறுவனம், அமைப்பு அல்லது தொழில்முனைவோரும், forms.gle/iAXXaCaPfjumPdtHA என்ற இணைப்பின் மூலம் பிப்ரவரி 10க்குள் பதிவு செய்யலாம்.


Pengarang :