ANTARABANGSA

துருக்கி நிலநடுக்கத்தில் தாய்லாந்து பெண் பலி

பேங்காக், பிப் 9- கடந்த திங்கள்கிழமை தென் துருக்கியை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் தாய்லாந்து பெண்ணும் ஒருவராவார்.

அப்பெண் மரணமடைந்த தகவலை அங்காராவில் உள்ள தாய்லாந்து தரகம் தங்களிடம் தெரியபடுத்தியதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளரும் தகவல் இலாகாவின் தலைமை இயக்குநருமான கஞ்சனா பாத்தாராசோக்கே கூறினார்.

அந்த பெண்ணின் சடலம் இஸ்கெண்டுரன் நகரில் இடிந்த கட்டிடத்திற்கு அடியில் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த மரணச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது என அவர் தெரிவித்தார்.

இறந்தவர் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்ட அவர், அடுத்தக் கட்டப் பணிகளை மேற்கொள்வதற்காகத் துருக்கி அதிகாரிகளுடன் தாங்கள் ஒத்துழைத்து வருவதாகச் சொன்னார்.

துருக்கி வரலாற்றில் மிகவும் மோசமான பேரிடராகக் கருதப்படும் இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Pengarang :