NATIONAL

பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மீண்டும் அமலுக்கு வராது – பிரதமர்

ஷா ஆலம், பிப் 14:  பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் பிற வரிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை.

மறுபுறம், மின்சார மானிய விவகாரத்தில் செய்தது போல் பணக்காரர்களுக்கான மானியக் குறைப்பு தொடர்ந்து கடுமையாக்கப்படும் என்று பிரதமர் கூறியதாகப் பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அரசாங்கம் செலவினங்களைக் குறைக்கவும், தேசியப் பொறுப்புகள் மற்றும் இப்போது RM1.5 டிரில்லியன் கடன்களை அடைப்பதற்கும் முயற்சிப்பதாக கூறினார்.

“கடந்த அமர்வில் நான் இந்தச் சபையில் விளக்கியபடி, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், தற்போது அந்தத் திட்டத்தை ரத்து செய்துள்ளது.

“உணவுப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தவிர  T 20, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.,” என்று அவர் கூறினார்.

நாடு எதிர்கொள்ளும் கடன் சுமையைச் சமாளிக்க அரசாங்கம் புதிய வரிகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதா என்ற தைப்பிங் பிரதிநிதி வோங் கா வோவின் துணைக் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

ஏப்ரல் 2015 பாரிசான் நேசனல் (பிஎன்) அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டியை, 2018 ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) அரசாங்கம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :