SELANGOR

மேலும் 15 முறை மலிவு விற்பனையை ஏற்பாடு செய்ய எண்ணம் – புக்கிட் மெலாவத்தி மாநிலச் சட்டமன்றம்

கோலா சிலாங்கூர், பிப் 22: புக்கிட் மெலாவதி மாநிலச் சட்டமன்றம் மே மாதம் வரை மேலும் 15 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மலிவு விற்பனையை ஏற்பாடு செய்ய உத்தேசித்துள்ளது.

2,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதன் வழி பயனடைவார்கள் என்று மாநிலச் சட்டமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி எதிர்பார்க்கிறார்.

முஹம்மது ஃபர்ஹான் சுல்கிஃப்லி கூறுகையில், ஜனவரி 16 முதல் ஏழு முறை நடத்தப்பட்ட மலிவு விற்பனை நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் விரும்புகிறார்கள்.

“புக்கிட் மெலாவத்தி மாநிலச் சட்டமன்றத்தில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறை என இலக்காகக் கொண்டு மேலும் 15 முறை மலிவு விற்பனை நிகழ்வை நாங்கள் ஏற்பாடு செய்வோம். ஏனெனில் இந்தப் பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமானம் பெறுபவர்கள் ஆவர் (B40). இருப்பினும், இது சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பிகேபிஎஸ்) வழங்கும் வாய்ப்புக்கு உட்பட்டது என்று அவர் கூறினார்.

“தற்போது பொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, மக்கள் தொகைக்கு, குறிப்பாக B 40 குழுவிற்கு உதவும் வகையில் மலிவு விற்பனை இங்கு ஏற்பாடு செய்ய விரும்புகிறோம்.

மலிவு விற்பனைத் திட்டம் ஜனவரி 16 முதல் ஒவ்வொரு நாளும் ஒன்பது வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டம் ஜூலை வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :