SELANGOR

ஒரு டன்னுக்கும் அதிகமான பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிக்கப்பட்டது – டீம் சிலாங்கூர்

ஷா ஆலம், பிப் 22: பிப்ரவரி 19 அன்று உலு சிலாங்கூரில் நடத்தப்பட்ட ஜெலஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் டீம் சிலாங்கூர் தன்னார்வலர்களால் ஒரு டன்னுக்கும் அதிகமான பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிக்கப்பட்டது.

“Trash4Cash“ மற்றும் பூமி கழிவு மேலாண்மை (M) Sdn Bhd உடன் இணைந்து இப்பிரச்சாரத்தை ஆதரித்தவர் களிடமிருந்து சமையல் எண்ணெய் சேகரிக்கப் பட்டதாக அதன் செயலகத்தின் தலைவர் ஷாஹய்செல் கெமன் தெரிவித்தார்.

“மறுசுழற்சி நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வைச் சமூகத்திற்கிடையே ஏற்படுத்துவதற்காக உலு சிலாங்கூரில் உள்ள ஒயாசிஸ் பத்தாங் காலியில் ஜெலஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வு நடைபெற்ற போது நாங்கள் இந்த பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தோம்.

“தோராயமாக ஆறு மணி நேரத்தில், 1,386.5 கிலோகிராம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் உள்ளூர் சமூகத்திடமிருந்து பெறப்பட்டது,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

“சமையல் எண்ணெய்யை எல்லா இடங்களிலும் அகற்றுவது சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு வழிவகுக்கும். அச்செயலை தடுக்கப் பொதுமக்கள் மற்றும் உணவு வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினோம்,“ என்று அவர் தெரிவித்தார்.

“மேலும், சேகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் பதப்படுத்தப்பட்டு, கனரக இயந்திரங்களில் பயன்படுத்த பயோடீசலாகத் தயாரிக்கப்படும்,” என்று குறிப்பிட்டார்.


Pengarang :