NATIONAL

பெர்சத்து கட்சியின் சிகாம்புட் தொகுதி துணைத் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு

ஷா ஆலம், பிப் 22- ஜானா விபாவா திட்டம் தொடர்பில் 41 லட்சம் வெள்ளியை 
லஞ்சமாகப் பெற்றதாகப் பெர்சத்து கட்சியின் சிகாம்புட் தொகுதி துணைத் தலைவர் 
ஆடாம் ரட்லான் ஆடாம் முகமது மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று 
குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி ரோஸிலா சாலே முன்னிலையில் தமக்கெதிராகக் கொண்டுவரப்பட்ட 
குற்றச்சாட்டை ஒரு வணிகரான 41 வயது ஆடாம் மறுத்து விசாரணை கோரினார்.

மொத்தம் 14 கோடியே 10 லட்சம் வெள்ளி மதிப்பிலான வட கிள்ளான் 
மாவட்டத் தலைமையகக் கட்டுமானத் திட்டப் பணியை மலேசிய அரசாங்கத்திடமிருந்து நெப்டுரிஸ் சென்.பெர்ஹாட் நிறுவனம்  பெறுவதற்கு ஊதியமாக லியான் டான் சுவானிடமிருந்து 20 லட்சம் வெள்ளியைத் தனது நிறுவனமான சரிக்காட் பாயு பூமிராயா நிறுவனத்தின் பெயரில் காசோலையாகப் பெற்றதாக அவர் மீது 
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், 4.78 கோடி செலவில் பெர்லிஸ் மாநிலத்தின் ஜாலான் சுங்கை ஆடாம் முதல் 
கம்போங் பெனுட் வரையிலான சாலையை நிர்மாணிக்கும் திட்டத்திற்காக நிறுவனம் 
ஒன்றின் நிர்வாக இயக்குநரான ஜூசோ மாமாட்டிடமிருந்து 21 லட்சம் வெள்ளியைப் பெற்றதாக அவர் மற்றொரு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்

Pengarang :