NATIONAL

மலேசியத் தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் புதியத் தலைவராக டத்தோ கமில் ஒத்மான் நியமனம்

கோலாலம்பூர், பிப் 24 – மலேசியத் தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (ஃபினாஸ்) புதியத் தலைவராக டத்தோ கமில் ஒத்மான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

கமில் இதற்கு முன்பு ஃபினாஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியதால் அவர் இத்தொழில்துறைக்குப் புதியவர் இல்லை என்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.

“புதிய ஃபினாஸ் தலைவராக நியமிக்கப்பட்ட டத்தோ கமில் ஓத்மானுக்கு வாழ்த்துக்கள்” என்று ஃபஹ்மி கூறினார்.

செனட்டர் டத்தோஸ்ரீ ஜுரைனா மூசாவின் சேவை கடந்த ஆண்டு டிசம்பரில் முடிவடைந்த நிலையில் அவருக்குப் பதிலாகக் கமில் நியமிக்கப்பட்டார்.

“அடுத்த வாரம் நான் அவருடன் ஃபினாஸின் வழிகாட்டுதல் உட்பட பல விஷயங்களைப் பற்றி விவாதிக்க ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யவுள்ளேன். ஃபினாஸின் கட்டாய திரையிடல் திட்டத்தின் புதிய தலைவர் நியமனம் கூடிய விரைவில் நடத்தப்படும் என்றும் ஃபஹ்மி கூறினார்.

கமில் ஜனவரி 2017 முதல் ஆகஸ்ட் 2018 வரை தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சகத்தின் படைப்புத் துறை ஆலோசகராகவும், 2014 முதல் 2016 வரை ஃபினாஸின் இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா


Pengarang :