NATIONAL

1967ஆம் ஆண்டுத் திவால் சட்டத்தில் திருத்தம்

கோலாலம்பூர், பிப் 24 – திவாலானவர்கள் இரண்டாம் வாய்ப்பினைப் பெறுவதற்குரிய உரிமையைப் பெற்றுள்ளதால் திவால் அடைந்தவர்கள் குறுகிய காலத்தில் இயல்பாகவே அந்த நிலையிலிருந்து விடுபடுவதற்கு ஏதுவாக 1967ஆம் ஆண்டு திவால் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

கடந்த ஜனவரி வரை 260,000 பேர் திவாலாகியுள்ளதாகக் கூறியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவர்களில் பெரும்பாலானோர் மலாய்க்காரர்கள். நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்காற்றக் கூடியவர்கள் என்றும் அவர் சொன்னார்.

ஐம்பதாயிரம் வெள்ளிக்கும் குறைவான கடன் சம்பந்தப்பட்டவர்கள்  நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் வரும் 2023ஆம் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி உடனடியாகத் திவால் நிலையிலிருந்து விடுவிக்கப் படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இந்த சட்டம் திருத்தப்பட்டவுடன் 130,000 பேர் திவால் பட்டியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.


Pengarang :