NATIONAL

ஊனமுற்றோர், முன்னாள் கைதிகள், வீடற்றோர், வேலையில்லாதோர் ஆகியோர்களுக்கு வேலை வாய்ப்பு

கோலாலம்பூர், பிப் 27: ஊனமுற்றோர், முன்னாள் கைதிகள், வீடற்றோர் மற்றும் நீண்டகாலமாக வேலையில்லாதவர்கள் போன்ற குழுக்களைப் பணியமர்த்தும் முதலாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஒரு மாதத்திற்கு RM600 வீதம் 3 மாதங்களுக்கு மேற்கண்ட குழுவினரைப் பணியமர்த்தும் முதலாளிகளுக்கு ஊக்கத்தொகையாக வழங்குகிறது. இத்திட்டத்தை ஊனமுற்றோர், முன்னாள் கைதிகள், வீடற்றோர் மற்றும் நீண்டகாலமாக வேலையில்லாதவர்கள் போன்ற தரப்பினர் ஆதரித்துள்ளனர்.

ஜேகா (42), எனும் முன்னாள் குற்றவாளி, இப்போது ஒரு லாரி ஓட்டுனராகப் பணிபுரிகிறார். “எனது செயல்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். முன்னாள் குற்றவாளிகளுக்கு உதவுவதற்கான அரசாங்கத்தின் திட்டம் பாராட்டப்பட வேண்டும். ஏனென்றால் அரசு என்னைப் போன்றவர்கள் இரும்புத்திரைக்கு வெளியே தொடர்ந்து வாழ இதன் மூலம் தைரியத்தை அளித்துள்ளது,” என்றார்.

எஹ்சான் ஜெயா ஹோல்டிங்ஸ் எஸ்டிஎன் பிஎச்டி எனும் போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ எஸ். சுரேஷ் ராவ் (47) கூறுகையில், இந்த ஊக்கத்தொகையானது மேற்குறிப்பிட்ட தரப்பினருக்குப் பட்டறைகள் அல்லது பயிற்சிகளை நடத்த முதலாளிகளுக்கு உதவும் என்றார்.

இந்த திட்டம் மேலும், பல வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு முதலாளிகளை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,” என அவர் கூறினார்.


Pengarang :