NATIONAL

ரஹ்மா கருணை நிதி உதவி வருடத்திற்கு 4 முறை வழங்கப்படும்

கோலாலம்பூர், பிப் 27:   RM1.67 பில்லியன் மதிப்புள்ள 8.7 மில்லியன் B40 குழுவிற்கு ரஹ்மா பணப் பங்களிப்பின் (STR) கட்டம் 1 செலுத்துதல், முன்னைய சமூக நலத்துறை தரவுகளின் அடிப்படையில் STR  தளத்தில் பதிவு செய்யப்பட்ட பெறுநரின் வங்கிக் கணக்கில் ஜனவரி 17 முதல் படிப்படியாக வரவு வைக்கப்படும்.

ரஹ்மா கருணை நிதி உதவி வருடத்திற்கு 4 முறை வழங்கப்படும் மற்றும் பணம் செலுத்தும் தேதி அவ்வப்போது அறிவிக்கப்படும். வங்கிக் கணக்கு இல்லாத பெறுநர்கள் எந்தப் பிஎஸ்என் வங்கி கிளையிலும் அப்பண உதவியைக் கோரலாம்.

இத்திட்டத்தில்  குடும்பம்  தவிர்த்து, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்,  21 வயது முதல் 59 வயது வரை கொண்ட தனிநபர் பிரிவினர் மற்றும்  19 வயது முதல் 59 வயது வரையான  உடல் ஊனமுற்றவர்களுக்கும்  உதவி உண்டு.

பி.கே.எம் (BKM) உதவி பெறுநர்கள் இறந்ததை உறுதி செய்யும் சான்றிதழ் மூலம் அவர்களின் கணவன் அல்லது மனைவி ரஹமா கருணை நிதி உதவி கட்டம் 1க்கான பணத்தைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

இந்த நிதி உதவிக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை. ரஹ்மா கருணை நிதி உதவி கட்டம் 1 மற்றும் 2க்கான பெறுநர்களின் தகவல்களைப் பி.கே.எம் எனப்படும் சமீக நலன் இலாக்கா (BKM) 2022யிலிருந்தும் கட்டம் 3 மற்றும் 4க்கான பெறுநர்களின் தகவல்களைப் பி.கே.எம் (BKM) 2023 லிருந்தும் பெறப்படும்.

ரஹ்மா திட்டத்தின் மற்றொரு பகுதி தேர்ந்தெடுக்கப் பட்ட உணவகங்களில் உணவைக்  குறைவான விலையில்  வாங்குவது மற்றும் Jualan Rahmah- என்ற ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் வெ 100 மில்லியன் அடிப்படைத் தேவைகளைச் சந்தை மதிப்பை விட 30% குறைவான விலைக்கு விற்பனை செய்யும் திட்டத்தையும் கொண்டுள்ளது.

இது தொடர்பான கூடுதல் தகவல்களை https://bantuantunnai.hasil.gov.my என்ற இணைப்பின் மூலம் STR இன் அதிகாரப்பூர்வப் போர்ட்டலில் பெறலாம்.


Pengarang :