NATIONAL

மோட்டார் சைக்கிள்களில் உணவு அல்லது பொருட்களை விநியோகிக்கும் தொழிலாளர்களுக்கான உதவி அறிவிப்பு

கோலா சிலாங்கூர், பிப் 27: 2023 பட்ஜெட்டில் மோட்டார் சைக்கிள்களில் உணவு அல்லது பொருட்களை விநியோகிக்கும் தொழிலாளர்களுக்கு உதவி அறிவிப்பு (பி-பங்கிலான்) மாநில அரசின் திட்டங்கள் அனைத்தும் சரியான பாதையில் செல்கிறது என்பதற்கு சான்றாகும்.

மனித மூலதன மேம்பாட்டு எஸ்கோ முகமட் கைருடின் ஒத்மான் கூறுகையில், மத்திய அரசின் உதவியானது ரோடா டாருல் எஹ்சான் (ரைட்) திட்டத்தைப் போன்றது, ஆனால் அதன் செயல்பாடு மிகவும் விரிவானது.

“ரைட் திட்டத்தின் மூலம் “பி.பங்கிலான்“ தரப்பினருக்கு ஊக்கமளித்த  முதல் மாநிலம் சிலாங்கூர் ஆகும். அவர்களுக்கு RM500 பண உதவி வழங்கப்பட்டது.

“இப்போது, மத்திய அரசும் அத்தரப்பினருக்கு உதவ முன்வந்துள்ளது, தேவைகளை  அடையாளம் கண்டு ஊக்கப்படுத்துவதில்  சிலாங்கூரின் நிலைப்பாடு  சரியானது  என்பதை  புலப்படுத்துகிறது. இப்பொழுது  இப்பிரிவினர்  மத்திய அல்லது மாநில அரசிடம் அவ்வுதவிக்காக விண்ணப்பிக்கலாம்,” என்றார்.

2023 பட்ஜெட்டில், B2 மோட்டார் சைக்கிள் உரிமங்கள் மற்றும் டாக்ஸி, பஸ் மற்றும் பி-பங்கிலான் உரிமங்களுக்கான ஓட்டுநர் சோதனை கட்டணத்தைம் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் ஒப்புக்கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டில் மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ரைட் திட்டமானது B2 மோட்டார் சைக்கிள் உரிமமத்திற்காகத் தள்ளுபடியாக RM350 மற்றும் பி-பங்கிலானுக்கு RM150யையும் வழங்கியது.

மேலும், வருடத்திற்கு RM70 சொக்சோ பங்களிப்பையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :