SELANGOR

மார்ச் மாதத்தில் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் – ஷா ஆலம் தேசியத் தாவரவியல் பூங்கா

ஷா ஆலம், பிப் 27: ஷா ஆலம் தேசியத் தாவரவியல் பூங்கா (டிபிஎன்எஸ்ஏ), இந்த மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் வாழ்வியல் தினம் மற்றும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

மார்ச் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு மாநில வனவிலங்கு துறை மற்றும் சிலாங்கூர் பெண்கள் மேம்பாட்டுத் துறையின் ஒத்துழைப்பும் இருப்பதாக ஷா ஆலம் தேசியத் தாவரவியல் பூங்கா தெரிவித்துள்ளது.

மரக்கன்றுகள் விற்பனை, ஜூம்பா, வண்ணம் தீட்டும் போட்டி, புதையல் தேடும் போட்டி மற்றும் பல சுவாரஸ்யமான நடவடிக்கைகள் பொதுமக்களுக்காகக் காத்திருக்கின்றன.

“பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகளும் வழங்கப்படும். எனவே மார்ச் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் ஷா ஆலம் தேசியத் தாவரவியல் பூங்காவிற்கு வருவதற்கான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். உங்கள் வருகையை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம்,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுச்சீட்டின் விலை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு RM1 மற்றும் பதின்ம வயதினர் மற்றும் பெரியவர்களுக்கு RM3 ஆகும்.


Pengarang :