NATIONAL

கோழி முட்டைகளுக்கான மானியம் ஜூன் 2023 வரை தொடரும் – வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு

புத்ராஜெயா, பிப் 28: வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் (KPKM)
கோழி முட்டைகளுக்கான மானியத்தை ஜூன் 2023 வரை தொடர்ந்து வழங்கும். இதற்கு
RM1.28 பில்லியன் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது..

பிப்ரவரி 17-ம் தேதி கோழி முட்டைகளுக்குத் தொடர்ந்து மானியம் வழங்குவது
தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாக வேளாண்மை
மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டில் கோழி முட்டை விநியோகம் நிலையானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மானியங்களை இலக்காகக்
கொண்ட வழிமுறை மற்றும் கொள்கை பற்றிய ஆய்வு எதிர்காலத்தில் முடிவு
செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோழி முட்டை விநியோகம் சீர் ஆனவுடன் வெளிநாடுகளில் இருந்து கோழி முட்டைகளை
கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என கேபிகேஎம்
தெரிவித்துள்ளது.

“நாட்டில் கோழி முட்டை விநியோகம் சீராகவும் தடையின்றியும் இருப்பதை உறுதி
செய்வதற்கான தற்காலிக நடவடிக்கையே கோழி முட்டைகளை இறக்குமதி செய்யும்
திட்டம்” என்று அவர் கூறினார்.

வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம், சந்தையில் கோழி முட்டை
விநியோகத்தின் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நாட்டில் கோழி

முட்டைகளின் நிலையான விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்க பல்வேறு
அணுகுமுறைகள் உடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

– பெர்னாமா


Pengarang :