NATIONAL

நாடு முழுவதும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 37,373 குடும்பத் தலைவர்கள் பாகுல் ரஹ்மா உதவியைப் பெறுவர்

ஷா ஆலம், பிப் 28: நாடு முழுவதும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மொத்தம் 37,373 குடும்பத் தலைவர்கள் (KIR) பாகுல் ரஹ்மா திட்டத்தின் மூலம் அடிப்படைத் தேவைகளுக்கான உதவிகளைப் பெறுவார்கள்.

RM100 மதிப்புள்ள பாயோங் ரஹ்மா (Payung Rahmah) திட்டம், RM2,500க்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட மிக ஏழ்மையான B10 குழுவை இலக்காகக் கொண்டதாக  அமைச்சர் கூறினார்.

உள் நாட்டு வாணிக மற்றும் வாழ்க்கை  செலவு  அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப்பின் கூற்றுப்படி, இந்த திட்டத்தில் மூலோபாய பங்காளிகள், பல்பொருள் அங்காடிகள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) இணைந்து செயல்படுகின்றன.

“இந்த திட்டம் அரசாங்கத்திற்குச் செலவை உள்ளடக்காது. ஏனெனில் தொழில்துறைமுனைவோர் மக்கள் நலனைப் பாதுகாப்பதில் மிக உறுதியுடன் காணப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விநியோகிக்கும் முன் அந்த அடிப்படை பொருட்கள் அனைத்தும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களின் சேவை மையங்களுக்கு அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :