SELANGOR

60 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் ‘ஜோம் ஷாப்பிங் பேக் டு ஸ்கூல்’ வவுச்சர்களைப் பெற்றனர்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 1: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியில் (எம்பிபிஜே) மொத்தம் 60 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் (பி 40) பள்ளிக்குத் தேவையான சீருடைகள், காலணிகள் மற்றும் எழுது பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்கான RM300 மதிப்பில் வவுச்சர்களைப் பெற்றனர்.

கடந்த பிப்ரவரி 25 அன்று ‘ஜோம் ஷாப்பிங் பேக் டு ஸ்கூல்’ நிகழ்ச்சியின் மூலம் வவுச்சர்களை வழங்கப்பட்டன. இந்நிகழ்வு பசார் ராய பெசார் மைடின் சுபாங் ஜெயாவில் நடைபெற்றதாகப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியில் கார்ப்பரேட் சமூகப் பிரிவு ஊடகச் செயலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது

“இந்த நன்கொடையின் நோக்கம் RM2,000 மற்றும் அதற்கும் குறைவான வருமானம் கொண்ட மற்றும் அதிக எண்ணிக்கையிலான பள்ளிக் குழந்தைகளை வைத்திருக்கும் குடியிருப்பாளர்களின் சுமையை எளிதாக்குவதாகும்.

நன்கொடை பெற்றவர்கள் அனைவரும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டத்தின் (பிபிகேபி) கீழ் கோத்தா டமன்சாரா, சுபாங் பள்ளத்தாக்கு, பெட்டாலிங் ஜெயா செலாத்தான், டேசா மென்தாரி மற்றும் பிற பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டுவசதித் திட்டத்தில் (பிபிஆர்) பதிவு செய்யப்பட்டவர்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


Pengarang :