SELANGOR

2,000க்கும் மேற்பட்டோர் இலவசக் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஷா ஆலம், மார்ச் 3: மார்ச் பாதியில் முடிவடைய உள்ள ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் (ஜேகேஎஸ்பி) திட்டத்தின் மூலம் 2,000க்கும் மேற்பட்ட நபர்கள் இலவசக் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொது சுகாதார எஸ்கோ கூறுகையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த, சிலாங்கூர் சாரிங்  நான்கு தொடர் நிகழ்வில் பங்கேற்க ஒவ்வொரு இடத்திலும் ஏறக்குறைய 300 நபர்கள் வருகை புரிந்தனர்.

“மார்ச் மாதத்தில் இத்திட்டம்  முடிவடைவதற்குள் இன்னும் 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கிறோம்.

“இந்த திட்டம் பொதுமக்கள் எதிர்நோக்கும்  நோயை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது. இதனால் அவர்கள் முன்னதாகவே நோயை கண்டறிந்து அதற்கான மேல் சிகிச்சை பெற முடியும்” என்று டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் நேற்று சிலாங்கூர் மீடியாவுடன் நடைபெற்ற நேர்காணலின் போது கூறினார்.

இந்த திட்டம் அனைத்து இல்திசம் சிலாங்கூர் பென்யாங் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான மாநில அரசாங்கத்தின் அணுகுமுறையாகும்.

“இன்னும் நிதி இருப்பதாலும், பொதுமக்களுக்குப் பயனாக உள்ளதாலும் இத்திட்டம் தொடர்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மே முதல் செப்டம்பர் வரையிலான இந்த திட்டம் RM3.4 மில்லியன் செலவில் குடும்ப மருத்துவ வரலாறு, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை கொண்ட நபர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

சிலாங்கூர் சாரிங் நிகழ்வில் இரத்தம் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, கண் பரிசோதனை, கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் பெருங்குடல் மல இரத்த பரிசோதனை போன்றவை இடம்பெறும்.

பிசியோதெரபி அமர்வுகளை நடத்துவதோடு கூடுதலாகப் பல் மற்றும் காது பரிசோதனைகள் உட்பட பல பரிசோதனைகளை அறிமுகப்படுத்தி இவ்வாண்டு இத்திட்டம் மேம்படுத்தப்பட்டது.


Pengarang :