SELANGOR

சிலாங்கூர் மக்கள் பிரத்தியேக வகுப்பு திட்டத்தில் (பிடிஆர்எஸ்) 50,000 மாணவர்கள் பங்கேற்றனர்

உலு லங்காட், மார்ச் 5: எஸ்பிஎம் தேர்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் மக்கள் பிரத்தியேக வகுப்பு திட்டத்தில் (பிடிஆர்எஸ்) 50,000 நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்கள் பங்கேற்றனர்.

டத்தோ மந்திரி புசார், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், மூன்று மற்றும் நான்காம் படிவங்களில் பயிலும் தேர்வுகளில் தோல்வியடையும் அபாயத்தில் இருக்கும் மாணவர்கள் இத்திட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறினார்.

“இந்த மாணவர்களால் கூடுதல் வகுப்புகளுக்குப் பணம் செலுத்த முடியாது. எனவே அவர்களுக்கு மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், வரலாறு மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு இத்திட்டத்தின் வழி கூடுதல் வகுப்புகள் அளிக்கப்படுகின்றன.

“இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட RM 6 மில்லியனுக்கும் அதிகமான தொகையின் மூலம், ஆசிரியர்களின் வருமானத்தையும் அதிகரிப்போம்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மேலும், கடந்த ஆண்டு முதல் மாநில அரசு மாணவர்களின் மதிய உணவுக்கான செலவை ஏற்றுகொண்டது என்றார்.

கடந்த ஆண்டு சிலாங்கூர் அரசாங்கம் இத்திட்டத்தை வெற்றியடைய செய்ய 7 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியது. நாட்டில் தொற்று நோய் தாக்கிய போது மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் இணைய வழி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Pengarang :