SELANGOR

(ஐ-சீட்) திட்டத்தின் மூலம் இந்திய சமூதாயத்திற்கு உதவி

உலு லங்காட், மார்ச் 5: சிலாங்கூர் இந்தியர் அதிகாரமளித்தல் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு (ஐ-சீட்) திட்டத்தின் பயனாளிகள், தொற்று நோய்க்கு பின் வணிகத்தைத் தொடர மாநில அரசின் உதவியை உயிர் நாடியாகக் கருதுகின்றனர்.

தொழில் முனைவோர், என்.பனிர்செல்வம் (41), நாட்டைத் தாக்கிய கோவிட் -19 தொற்றுநோய், கடந்த 20 ஆண்டுகளாக அவர் நடத்தி வந்த வணிகத்தை சோதித்ததாகக் கூறினார்.

“முன்பு, அரசாங்கம் அமல்படுத்திய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் (எம்சிஓ) எனது வணிகம் கடுமையாக பாதிக்கப் பட்டது. “இப்போது நன்றாக இருக்கிறது, ஆனால் நான் இன்னும் பழைய நிலையை அடைய முயற்சிக்கிறேன்,” என்று அவர் கூறினார். மேலும், ஐ-சீட் உதவியுடன் ஒரு ‘சவுண்ட்மிக்சர்’ சவுண்ட் சிஸ்டம் யூனிட்டைப் பெற்றார்.

இதற்கிடையில் (47) வயதான கே.ரத்ன தேவி, கடந்த 10 ஆண்டுகளாக அவர் நடத்தி வரும் பூ விற்பனையைப் பல இடங்களில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்.

“கடந்த ஜனவரியில் ஐ-சீட்க்கு விண்ணப்பித்தேன். விண்ணப்ப செயல்முறையும் கடினமாக இல்லை. இதுபோன்ற உதவிகளை வழங்கிய மாநில அரசுக்கு நன்றி,” என்று அவர் கூறினார்.

ஐ-சீட் திட்டம் ஏப்ரல் 2021 இல் தொடங்கப்பட்டது. இது இந்தியர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பம் செய்யும் இந்தியர்களின் வணிகத்திற்க்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

விண்ணப்பத் தகுதிகள் சிலாங்கூர் குடிமக்கள் அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்கள், தனிநபர் அல்லது குடும்ப வருமானம் மாதத்திற்கு RM3,000 க்கும் குறைவாக உள்ளவர்கள் மற்றும் அவர்களின் வணிகம் சிலாங்கூர் மாநிலத்தில் செயல்பட வேண்டும்.


Pengarang :