SELANGOR

மாநிலத்தில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர விலை அடுக்குமாடி குடியிருப்புகள் (இ-செரியா) மற்றும் (இ-கோப்) திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்ய அழைப்பு

அம்பாங் ஜெயா, மார்ச் 5: மாநிலத்தில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர விலை அடுக்குமாடி குடியிருப்புகளின் சுமார் 11,000 கூட்டு மேலாண்மை அமைப்புகள் (ஜேஎம்பி) மாநில மறுவாழ்வுத் திட்டம் (இ-செரியா) மற்றும் கட்டிட ஆணையர் பிரிவு (இ-கோப்) திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்யுமாறு மாநில அரசு கேட்டுக்கொள்கிறது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற நலன் எஸ்கோ ரோட்சியா இஸ்மாயில் கூறுகையில், மாநிலத்தில் உள்ள 12,000 கூட்டு மேலாண்மை அமைப்புகளில் இது வரை 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இத் திட்டங்களுக்குப் பதிவு செய்துள்ளனர்.

“சில நேரங்களில் அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அதாவது உடைந்த கூரைகள், சேதமடைந்த லிஃப்ட்கள், ஒழுங்காகச் செயல்படாத குப்பை அறைகள் போன்றவை மாநில அரசுக்குத் தெரியாமல் போகுகிறது.

“இந்த இரு திட்டங்களில் பதிவுசெய்தால், பழுதுபார்ப்புகளுக்கு எவ்வளவு பட்ஜெட் தேவைப்படுகிறது என்பது பற்றிய விரிவான கண்ணோட்டத்தை கூட்டு மேலாண்மை அமைப்பால் மாநில அரசுக்கு வழங்க முடியும்.

தேவையான ஒதுக்கீட்டைப் பற்றிய விரிவான கண்ணோட்டத்தைப் பெறும்போது, திட்டமிடல் மற்றும் நிர்வாகச் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இ-செரியா திட்டம் சிலாங்கூரில் குறைந்த மற்றும் நடுத்தர விலை அடுக்குமாடி குடியிருப்புகளின் உடைமைகள் சேதத்தை சரி செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.

மேலும், (இ-கோப்) ஆனது ஜேஎம்பி மற்றும் மேலாண்மை கார்ப்பரேஷன் தொடர்பான தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பாக செயல்படுகிறது.


Pengarang :