NATIONAL

நாடு முழுவதும் உள்ள இணைய நெட்வொர்க் அணுகலின் தரம் தொடர்பான பிரச்சனைகளை ஜூன் மாதத்திற்குள் தீர்க்க உத்தரவு – மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம்

ஷா ஆலம், மார்ச் 7: நாடு முழுவதும் உள்ள இணைய நெட்வொர்க் அணுகலின் தரம் தொடர்பான பிரச்சனைகளை ஜூன் மாதத்திற்குள் தீர்க்க மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (SKMM) உத்தரவிட்டுள்ளது.

எனவே, இந்த சிக்கலைச் சமாளிக்க நெட்வொர்க் பகிர்வு தொடர்பாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

“சில சமயம் கிராமப் புறங்களில் இணையத் தரம் நன்றாக உள்ளது, ஆனால், சில சமயம் லைன் இல்லாமல் இரு தொலைப் பேசிகளை உபயோகிக்க வேண்டிய நிலை உள்ளது. உண்மையில், இதில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க முடியும்.

“எனவே மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கு நான் வலியுறுத்தியது, இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிந்தால் தரம் மற்றும் நெட்வொர்க் பகிர்வு சிக்கல் தீர்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவை தரம் மட்டுமல்ல, பயனர்கள் அனுபவிக்கும் அனுபவத்தின் தரத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதை தனது தரப்பு உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.


Pengarang :