SELANGOR

ஜெக்கலுக்கு இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்காலிகத் தளத்தில் செயல்பட அனுமதி

ஷா ஆலம், மார்ச் 7: ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) ஜெக்கல் டிரேடிங் எஸ்டிஎன் பிஎச்டி (ஜெக்கல்) நிறுவனத்திற்கு இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்காலிகத் தளத்தில் செயல்பட அனுமதி வழங்கியது.

துணை மேயர் ஐஆர் செரெமி தர்மன் கூறுகையில், ஜவுளிக் கடையின் கிளை, பெர்சியாரான் பெர்மாயில் (ஷா ஆலம் மருத்துவமனைக்கு அடுத்தது) வணிகத்தைத் தொடங்கும்.

“ஆமாம், ரெண்டு வருடத்திற்குத் தற்காலிகப் பெர்மிட் மூலம் ஜெக்கலுக்கு அனுமதி கொடுத்திருக்கோம். இந்த தளம் கலப்பு மேம்பாட்டு வகை நிலமாகும்” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த ஜனவரியில், பிரிவு 7ல் உள்ள விஸ்மா ஜெக்கல், ரம்டான் மற்றும் ஹரி ராயா பண்டிகைக்கு தயாராகும் நிலையில் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்கள் தீ விபத்தில் அழித்ததால், கோடிக்கணக்கான ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.

முன்னதாக, அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் ஃபரோஸ் முகமட் ஜெக்கல், துணிக்கடையின் வணிகச் செயல்பாடுகள் சீர்குலைந்த தாகவும், ஷா ஆலமைச் சுற்றி ஒரு புதிய வணிகத் தளத்திற்கு ஏற்ற இடத்தை கண்டுபிடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.


Pengarang :