NATIONAL

கொள்ளையில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் மூன்று பேர் கைது

கோலாலம்பூர், மார்ச் 8: பிப்ரவரி 25 அன்று செந்தூல், தாமான் பிலாங்கியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

காலை 6.07 மணிக்கு தனது தரப்பில் வழக்கு அறிக்கை கிடைத்ததாக செந்தூல் மாவட்டக் காவல்துறை தலைமை உதவி ஆணையர் பெஹ் எங் லாய் தெரிவித்தார்.

ஆசிரியையான 45 வயதுடைய பெண் ஒருவர் சந்தேக நபர்களால் தாக்கப் பட்டு கம்பியால் கட்டப்பட்டதாகக் அவர் கூறினார்.

“சந்தேக நபர்கள் கைப்பேசி , கைக்கடிகாரம், வங்கி அட்டை மற்றும் ரிங்கிட் 6,000 ரொக்கத்துடன் ஓடிவிட்டனர்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

விசாரணையின் மூலம், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் சிலாங்கூரில் உள்ள டாமான்சாரா மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் 26 முதல் 35 வயதுடைய மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ததாக தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவரின் கைக்கடிகாரம், பல்வேறு பிராண்டுகளின் இரண்டு கைப்பேசிகள், ஒரு சாவி, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சம்பவத்தின் போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய பல ஆடைகள் ஆகியவற்றை நாங்கள் கைப்பற்றினோம்,” என்று அவர் தெரிவித்தார்.

மக்கள் வசிக்கும் வீடுகளைக் குறிவைத்து கொள்ளை அடிப்பதே இந்த குழுவின் செயல்பாடாக இருந்து வருகிறது என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் அம்மூவரைக் கைது செய்ததன் வழி கோலாலம்பூரில் நான்கு வழக்குகளையும் சிலாங்கூரில் ஒரு வழக்கையும் காவல்துறையினரால் தீர்க்க முடிந்தது.


Pengarang :