NATIONAL

சட்டவிரோத வேட்டையைத் தடுக்க 1,010 துப்பாக்கி லைசென்ஸ்கள் ரத்து- ஐ.ஜி.பி. தகவல்

ஜெராண்டுட், மார்ச் 13- வன விலங்குகளுக்கு எதிரான சட்டவிரோத வேட்டை 
நடவடிக்கைகளைத் தடுக்க 1,010 பேரின் ரைபிள் துப்பாக்கிகளுக்கான லைசென்ஸ் 
ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் (ஐ.ஜி.பி.) டான்ஸ்ரீ 
அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.

வேட்டைக்காரர்கள் மத்தியில் இந்த வகை துப்பாக்கிகள் அதிகம் 
பயன்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

சடாடவிரோத வேட்டையைத் தடுக்கும் நோக்கில் அண்மைய சில ஆண்டுகளாக ரைபிள் லைசென்ஸாகளை ரத்து செய்து அந்த சுடும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளோம். இவ்வாண்டில் கிளந்தான், குவா மூசாங்கில் புலி ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் மீட்டுக் கொள்ளப்பட்டது என்றார் அவர்.

நேற்று இங்கு கஸானா ஒருங்கிணைந்த கூட்டத்திற்குத் தலையேற்றப் பின்னர் செர்தியாளர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார்.

சட்டவிரோத வேட்டையைத் தடுக்கும் நோக்கில் சுடும் ஆயுதங்களுக்கான லைசென்ஸ் 
கட்டங் கட்டமாக மீட்டுக் கொள்ளப்படும் என்று முன்னாள் தேசியப் போலீஸ் படைத் 
தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் கடந்த 2020 ஆம் ஆண்டு கூறியிருந்தார். 

இந்த நடவடிக்கை கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் வேளையில் புதிதாகத் துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்படுவதும் நிறுத்தப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

Pengarang :