SELANGOR

நாட்டின் சிறந்த ஊராட்சி மன்றமாகப் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் தேர்வு

ஷா ஆலம், மார்ச் 14- நாட்டின் தலைசிறந்த ஊராட்சி மன்றமாகப் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 155 ஊராட்சி மன்றங்களுக்கு மத்தியில் 98.32 விழுக்காட்டுப் புள்ளிகளைப் பெற்றதன் வழி இந்த இந்த மாநகர் மன்றத்திற்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டதாக மாநகர்
மன்றத்தின் வர்த்தகத் தொடர்பு பிரிவு கூறியது.

நிர்ணயிக்கப்பட்ட மூன்று தர நிர்ணயத்தின் அடிப்படையில் அதாவது அடிப்படைச் சேவை, வாடிக்கையாளர் மேலாண்மை மற்றும் பொது மக்கள் கருத்து அல்லது பங்கேற்பின் வழி இந்த அந்தஸ்தை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் பெற்றதாக அது தெரிவித்தது.

ஊராட்சி மேம்பாட்டுத்து துறை அமைச்சர் ஙா கோர் மிங் தலைமையில் இம்மாதம் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் ஈப்போவில் நடைபெற்ற நிகழ்வில் பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது அமிர் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.

“மடாணி நகராண்மை மற்றும் தேசிய சுபிட்சம்“ எனும் கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்த ஊராட்சி மன்ற மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களையும் சேர்ந்த டத்தோ பண்டார்கள் மற்றும் நகராண்மைக் கழகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Pengarang :