NATIONAL

இந்தியச் சமுதாயத்தின் தேவைகளை அறிந்து பணியாற்றி வருகிறேன்! -அமைச்சர் சிவகுமார் கூறுகிறார்

தைப்பிங், மார்ச் 14- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான
அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் என்ற முறையில் இந்தியச் சமுதாயத்தின் தேவைகளை அறிந்து பணியாற்றி வருகிறேன் என்று மனித வள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

இந்தியச் சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப் போராடி கொண்டிருக்கிறேன். எனது பணிகளைச் செய்து முடிக்க கால அவகாசம் தேவைபடுகிறது என்று அவர் கூறினார்.

என்னையும் அரசாங்கத்தையும் குறி வைத்து தாக்குதல் நடத்தினாலும் அதை பற்றி நான் கவலைபட மாட்டேன். அரசியலில் பல போராட்டங்களையும் சவால்களையும் சந்தித்த அனுபவம் எனக்கு இருக்கிறது.

ஆகவே  சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் போராட்டங்களில் இருந்து ஒருபோதும்
விலகிவிட மாட்டேன் என்றார் அவர். இப்போது அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது.

மேலும் இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்ப்பள்ளிகள் உட்பட சமுதாயத்தின் பிரச்சனைகள் படிப்படியாகத் தீர்வு காணவும்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு   வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

தைப்பிங் ஜாலான் காக்கி புக்கிட் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்திற்கு நேற்று சிறப்பு வருகை புரிந்த மனித வள அமைச்சர் சிவகுமார் 50,000 வெள்ளி மானியம் வழங்கியபோது இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :