NATIONAL

சிடேக் திட்டங்கள் வாயிலாக 33.4 கோடி வெள்ளி வருமானம்- சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், மார்ச் 14- சிலாங்கூர் மாநில தகவல் தொடர்பு மற்றும் இலக்கவிய்ல பொருளாதார கழகம் (சிடேக்) கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் நடத்தப்பட் நிகழ்வுகளின் வழி இதுவரை 33 கோடியே 47 லட்சம் வெள்ளி மதிப்பிலான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

சிலாங்கூர் இ-காமர்ஸ் ஆன்போர்டிங், இ-டாகாங் பென்டிடிக்கான் மற்றும் டாப் இசிஎம் எனப்படும் இ-டாகாங் உத்தாமா மலேசியா விருதளிப்பு போன்ற நிகழ்வுகளின் வெற்றிக்கு இந்த கழகம் துணை புரிந்துள்ளது என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இது தவிர அண்மைய சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் எஸ்.ஏ.பி. எனப்படும் சிலாங்கூர் உத்வேகத் திட்ட்ம் எஸ்.டி.இ.சி. எனப்படும் சிலாங்கூர் விவேக நகர மற்றும் இலக்கவியல் மாநாடு ஆகியவையும் இதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மொத்தம் 5.89 கோடி வெள்ளி வர்த்தகம் மற்றும் 427,643 ஆர்டர்களைப் பெற்ற தொழில்முனைவோரை கௌரவிக்கும் விதமாக நடதப்பட்ட 2022 டாப் இசிஎம். நிகழ்வுக்கு 440 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது முதல் அதிக விண்ணப்பங்களை பதிவு செய்த நிகழ்வு இதுவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு எஸ்.டி.இ.சி. 5 கோடி வெள்ளி மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகளைப் பெற்றதோடு முதலீட்டாளர்கள், வணிகர்கள் மற்றும் வருகையாளர்ளுக்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியது என அவர் மேலும் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் இன்று பண்டார் உத்தாமா தொகுதி உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.


Pengarang :