NATIONAL

கோவிட்-19 பெருந்தொற்றின் எதிரொலி- 200,000 தொழில்முனைவோர் வர்த்தகத்தைக் கைவிட்டனர்

ஷா ஆலம், மார்ச் 14- கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் ஏற்பட்ட பாதிப்பு கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை நாடு முழுவதும் 193,409 தொழில்முனைவோர் தங்கள் வர்த்தகத்தை மூடினர்.

அவர்கள் தங்கள் வர்த்தகத்தை கைவிடுவதற்கு கோவிட்-19 நோய்த் தொற்றின் நீண்டகாலப் பாதிப்பு மற்றும் பொருள் விலையேற்றம் முக்கிய காரணமாக இருந்ததாக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் டத்தோ ஈவோன் பெனடிக் கூறினார்.

எனினும், அரசின் மானியம், கடனுதவி, பயிற்சி மற்றும் வழிகாட்டல்கள் வாயிலாக அவர்களில் பலர் மீண்டும் தங்கள் வர்த்தகத்தை தொடரத் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக தொழில் முனைவோர் துறைக்குப் புத்துயிரளிப்பதற்கான கடப்பாட்டை அமைச்சு கொண்டுள்ளதாகக் கூறிய அவர், இத்தகைய 185 திட்டங்கள் மூலம் 543,080 தொழில் முனைவோர் பயனடைவர் என்றார்.

தொழில்முனைவோர் தங்கள் தொழிலில் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கேட்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக அவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவதை அமைச்சு அதிகப்படுத்தியுள்ளது என்று மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர் குறிப்பிட்டார்.


Pengarang :